/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுதந்திரதினம், குடியரசுதினம் தேதியை குறிக்கும் ரூபாய் சேகரிக்கும் மாணவன்

ADDED : மே 05, 2025 01:33 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த பழம்பத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, இவரது மகன் பாலச்சந்தர், 21.இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.இவர், நாணயங்கள் மற்றும் அரிய வகை ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் ஆர்வம் உள்ளவர்.
பழங்கால நாணயங்கள் முதல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள் வரை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் அரிய வகையான தேதியை குறிக்கும் வகையிலான ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து வருகிறார். ஜன. 26ம் தேதி குடியரசு தினத்தை குறிக்கும் வகையிலான 260122 என்ற சீரியல் நம்பர் உள்ள ரூபாய் நோட்டுகளையும், ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தை குறிக்கும் வகையிலான 150822 என்ற சீரியல் நம்பர் உள்ள ரூபாய் நோட்டுகளையும், 2025ம் ஆண்டை குறிக்கும் வகையில், 05052025 என்ற சீரியல் நம்பர் உள்ள ரூபாய் நோட்டுக்களையும் சேகரித்துள்ளார்.
ரூபாய் நோட்டுகள் சேகரிக்கும் மருத்துவ கல்லுாரி மாணவர்
மதுராந்தகம், மே 5 -
ரூபாய் நோட்டுகள் சேகரிக்கும் மருத்துவ கல்லுாரி மாணவர்