ADDED : டிச 16, 2024 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மலை பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் புவனேஷ், 17. இவர், மதுராந்தகம் இந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று, நண்பர்களுடன் மதுராந்தகம் ஏரியிலிருந்து கலங்கள் வழியாக நீர் வெளியேறும் பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.
மதுராந்தகம் ஏரியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் கிளியாறு மற்றும் நெல்வாய் ஆற்றிலிருந்து வரும் நீர் முழுதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் செல்லும் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த புவனேஷ் திடீரென மாயமாகி உள்ளார்.
இது குறித்து, மதுராந்தகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தீயணைப்புத் துறையினர், காணாமல் போன மாணவனை, தேடி வருகின்றனர்.