/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்
/
விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்
ADDED : ஜன 12, 2024 11:50 PM
செங்கல்பட்டு:கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
செங்கை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
கேலோ இந்தியா இளைஞர் போட்டியின் பிரசார வாகனம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, வரும் 17ம் தேதி, வருகிறது. காலை 6:00 மணிக்கு, மாரத்தான் போட்டிகள், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் துவங்குகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி வளாத்தில், கபடி, கூடைபந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் காலை 9:00 மணிக்கு நடக்கின்றன. இப்போட்டியில், பங்கேற்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், புதிய கலெக்டர் வளாகத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலத்தில், வரும் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மொபைல் எண்கள்; 74017 03461- 96776 06393 எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.