/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் சிரமம்
/
அரசு பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் சிரமம்
அரசு பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் சிரமம்
அரசு பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் சிரமம்
ADDED : டிச 29, 2025 07:10 AM

சித்தாமூர்: பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே, மாநில நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால், மாணவர்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில், செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் மழுவங்கரணை, சரவம்பாக்கம், முகுந்தகிரி, பேரம்பாக்கம், பையம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த சாலை வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு விபத்துகளை தடுக்க, பள்ளி எதிரே சாலையில் இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின், வேகத்தடை அமைக்கப் படவில்லை.
இதனால், அசுர வேகத்தில் சாலையில் செல்லும் வாகனங்களால், மாணவர்கள் சாலையைக் கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் வேகத்தடை அல்லது இரும்பு தடுப்புகள் வைக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

