/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புழுதி பறக்கும் பாலுார் சாலை கண் எரிச்சலால் மாணவர்கள் அவதி
/
புழுதி பறக்கும் பாலுார் சாலை கண் எரிச்சலால் மாணவர்கள் அவதி
புழுதி பறக்கும் பாலுார் சாலை கண் எரிச்சலால் மாணவர்கள் அவதி
புழுதி பறக்கும் பாலுார் சாலை கண் எரிச்சலால் மாணவர்கள் அவதி
ADDED : ஜன 10, 2025 02:16 AM

மறைமலைநகர்:பாலுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை, 13 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையைப் பயன்படுத்தி பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரகடம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
மேலும் காஞ்சிபுரம், உத்திரமேரூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், எம்.சாண்ட் ஏற்றிச்செல்லும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும், தினமும் இந்த சாலையில் செல்கின்றன.
இதனால், பாலுார் ரயில்வே 'கேட்' அருகில் இந்த சாலை, கடுமையாக சேதமடைந்து உள்ளது.
இதன் காரணமாக அதிக அளவில் புழுதி பறப்பதால், இந்த பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இருசக்கர வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, மணல் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு, நிலை தடுமாறி சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இங்கு ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது.
சாலையிலிருந்து பறக்கும் துாசியால் கண் எரிச்சல், தும்மல் போன்றவை ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கனரக வாகனங்கள் செல்லும் போது துாசி பறப்பதால், சாலையை ஒட்டியுள்ள வகுப்பறைகளின் ஜன்னல் கதவுகள் பெரும்பாலும் மூடியே வைக்கப்படுகின்றன.
சில வகுப்பறைகளில் திரையிட்டும் மூடப்பட்டுள்ளன.
எனவே, இந்த பகுதியில் படிந்துள்ள மணல் திட்டுக்களை அகற்றி, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

