/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் தேக்கம் மாணவர்கள் அவதி
/
மழைநீர் தேக்கம் மாணவர்கள் அவதி
ADDED : ஆக 25, 2025 01:11 AM
செங்கல்பட்டு:வெள்ளப்பந்தல் கிராமத்தில், தொடக்கப்பள்ளி வளாகத்தில், மழைநீர் தேங்குவதை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளப்பந்தல் கிராமத்தில், தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, வெள்ளப்பந்தல், குருமுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால், மழை பெய்யும்போது, தண்ணீர் தேங்கி வருகிறது.
இதுமட்டும் இன்றி, மாணவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மனு அளித்தனர்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன்பின், பள்ளி வளாகத்தில், மழைநீர் தேங்குவதை அப்புறப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள், கலெக்டரிடம், நேற்று, மனு அளித்தனர்.
இம்மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.