/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேசவராயன்பேட்டையில் ரூ.8.44 கோடியில் துணைமின் நிலையம்
/
கேசவராயன்பேட்டையில் ரூ.8.44 கோடியில் துணைமின் நிலையம்
கேசவராயன்பேட்டையில் ரூ.8.44 கோடியில் துணைமின் நிலையம்
கேசவராயன்பேட்டையில் ரூ.8.44 கோடியில் துணைமின் நிலையம்
ADDED : ஏப் 03, 2025 07:02 PM
செங்கல்பட்டு:கேசவராயன்பேட்டையில், புதிதாக துணை மின் நிலையம் அமைக்க, 8.44 கோடி ரூபாய் நிதியை, மின்வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அச்சிறுபாக்கம் மின்வாரிய கோட்டத்தில் மேல்மருவத்துார், கீழ் மருவத்துார், கேசவராயன்பேட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமங்களில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்கு, மின்சாரம் வழங்கப்பட்டது.
தற்போது, இந்த கிராமங்களில் குடியிப்புகள், வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் அதிகரித்து உள்ளன.
இதனால், மின்னழுத்த குறைபாடு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகின.
வீடுகளிலும் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் பின், கேசவராயன்பேட்டையில் துணை மின் நிலையம் அமைக்க நிலம் கேட்டு, கலெக்டரிடம் மின்வாரியத்தினர் மனு அளித்தனர்.
இந்த மனுவை பரிசீலனை செய்து, துணை மின் நிலையம் அமைக்க ஒரு ஏக்கர் 13 சென்ட் நிலத்தை, மின்வாரியத்திற்கு வழங்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
அதன் பின், 33/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்க, 8 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதியை மின்வாரியம் சமீபத்தில் ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, துணை மின் நிலைய பணிகள் விரைவில் துவங்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

