/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாறைக்குன்று சிற்ப பகுதிகளில் சேத நடைபாதையால் அவதி
/
பாறைக்குன்று சிற்ப பகுதிகளில் சேத நடைபாதையால் அவதி
பாறைக்குன்று சிற்ப பகுதிகளில் சேத நடைபாதையால் அவதி
பாறைக்குன்று சிற்ப பகுதிகளில் சேத நடைபாதையால் அவதி
ADDED : அக் 28, 2024 11:40 PM

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்ப வளாக பகுதிகளில், சுற்றுலா பயணியர் நடந்து செல்ல வெண்மை நிற பாறைக் கற்களில், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை வழியாக பயணியர் சிரமமின்றி நடந்து செல்கின்றனர். பாறைக்குன்று பகுதியில் வராக மண்டபம், ராயர் கோபுரம், மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட குடவரைகள் உள்ளன.
இப்பகுதிகளில் பயணியர் நடந்து செல்ல, குறுகிய அகல நடைபாதைகளை, பல ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் துறை அமைத்தது.
இப்பாதையின் இருபுற விளிம்பில், கருங்கற்களில் உயரம் குறைவான தடுப்பு அமைத்து, அதனிடையே கிராவல் மண் நிரப்பி, சமன் செய்து பாதையாக அமைக்கப்பட்டது.
மழையின்போது பாதைகளில் நிரப்பப்பட்ட கிராவல் மண் அரித்து, தற்போது கரடுமுரடாக உள்ளது. தற்போது, பயணியர் அதிகளவில் வரும் நிலையில், நடைபாதை சேதமடைந்துள்ளதால் அவதிக்குள்ளாகின்றனர்.
முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நடக்க இயலாமல் தடுமாறுகின்றனர். பாதை விளிம்பு தடுப்பில், கீழே விழும் அபாயத்துடன் நடக்கின்றனர்.
எனவே, பாறைக்குன்று நடைபாதைகளை சீரமைக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.