/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லஞ்சம் கேட்ட சூப்பர்வைசர், குமாஸ்தாவுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை
/
லஞ்சம் கேட்ட சூப்பர்வைசர், குமாஸ்தாவுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை
லஞ்சம் கேட்ட சூப்பர்வைசர், குமாஸ்தாவுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை
லஞ்சம் கேட்ட சூப்பர்வைசர், குமாஸ்தாவுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை
ADDED : மே 10, 2025 01:58 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் தவமணி என்கிற பாலசுப்பிரமணியன்.
இவர், 2009 அக்., 12ம் தேதி, மறைமலைநகர் நகராட்சியில் ஒப்பந்த பணி மேற்கொண்டதற்கான காசோலையை, மேற்பார்வையாளர் நந்தகுமார், 57, என்பவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது, உயரதிகாரியின் கையொப்பம் பெற்று, காசோலை வழங்க கமிஷனாக, 20,000 ரூபாயும், தலைமை குமாஸ்தா ஜானகிராமன், 63, என்பவருக்கு, 10,000 ரூபாயும் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தவமணி, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில், 2009 அக்., 13ம் தேதி புகார் அளித்தார்.
அதன் பின் நந்தகுமார், ஜானகிராமன் ஆகியோரிடம், ரசாயனம் தடவிய தலா 10,000 ரூபாயை தவமணி கொடுக்கும் போது, மறைந்திருந்த போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நந்தகுமார், ஜானகிராமன் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.