/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வானவில் மன்ற கருத்தாளர்கள் 17 பேருக்கு கணினி வழங்கல்
/
வானவில் மன்ற கருத்தாளர்கள் 17 பேருக்கு கணினி வழங்கல்
வானவில் மன்ற கருத்தாளர்கள் 17 பேருக்கு கணினி வழங்கல்
வானவில் மன்ற கருத்தாளர்கள் 17 பேருக்கு கணினி வழங்கல்
ADDED : அக் 01, 2024 12:24 AM
செங்கல்பட்டு, - செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டங்களில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கணிதம், அறிவியல் பரிசோதனை செய்து காண்பிக்க, 17 வானவில் கருத்தாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், மேற்கண்ட பாடங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனைகள் செய்து காண்பிப்பது உள்ளிட்ட பணிகளை, கையடக்க கணினியில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலகத்தில், 17 வானவில் கருத்தாளர்களுக்கு கையடக்க கணினியை, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் நேற்று வழங்கினார்.
இதில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவகுமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் முகமது கலிம், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.