/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயிர் சாகுபடி பரப்பு குறித்து திருக்கழுக்குன்றத்தில் சர்வே
/
பயிர் சாகுபடி பரப்பு குறித்து திருக்கழுக்குன்றத்தில் சர்வே
பயிர் சாகுபடி பரப்பு குறித்து திருக்கழுக்குன்றத்தில் சர்வே
பயிர் சாகுபடி பரப்பு குறித்து திருக்கழுக்குன்றத்தில் சர்வே
ADDED : நவ 26, 2024 02:28 AM

திருக்கழுக்குன்றம்,
செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் சம்பா உள்ளிட்ட அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் டிஜிட்டல் சர்வே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருக்கழுக்குன்றம் வட்டாரப்பகுதிகளில் பயிர் சாகுபடி பரப்பு குறித்து சர்வே செய்யப்பட்டது.
திருக்கழுக்குன்றம் வட்டார பகுதியில், விவசாயிகள், நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். தற்போது, பயிர் சாகுபடி பரப்பை, வேளாண்மை துறையினர், கடந்த நவ., 16ம் தேதி முதல், மின்னனு நடைமுறையில் கணக்கிடுகின்றனர்.
இவ்வட்டாரத்தில் உள்ள 106 வருவாய் கிராமங்களில், 70 கிராமங்களில் முடிக்கப்பட்டு, பிற கிராமங்களில், நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில், நேற்று நடந்த இப்பணியை, வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் சரவணன், திருக்கழுக்குன்றம் உதவி இயக்குனர் ஜெயராமன் ஆகியோருடன், இணை இயக்குனர் பிரேம்சாந்தி பார்வையிட்டார்.
இவ்வட்டாரத்தில் கணக்கீடு முடிக்கப்பட்டது குறித்து கேட்டறிந்து, எஞ்சியுள்ள பகுதிகளில், கணக்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். மேலும், விரிவாக்க மையத்தில், அரசு மானிய திட்டங்களில் வழங்கப்படும் இடுபொருட்கள் இருப்பு பதிவை, ஆன்லைன் வாயிலாக சரிபார்த்தார்.
மானிய பொருட்களை விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் வழங்குமாறு, அலுவலர்களிடம் அறிவுறுத்தி, இணைய வழி பணப்பரிமாற்றத்தையும் உறுதி செய்தார்.
விவசாயிக்கு, 50 சதவீத மானிய விலையில் தெளிப்பான் வழங்கினார். விதை சேமிப்பு கிடங்கில், மாதம் இரண்டு முறை பூச்சி தடுப்பு மருந்து தெளித்து, பூச்சிகளை தடுக்கவும் அறிவுறுத்தினார்.