ADDED : டிச 19, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நில அளவையர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.
ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைதல், தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும், ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். நுாறுக்கும் மேற்பட்ட நில அளவையர்கள் பங்கேற்றனர்.