/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்
/
நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 22, 2025 01:31 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில், களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவி, நில அளவை துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயலர் பேபி, மாவட்ட செயலர் பிரபு உள்ளிட்ட பலர் பேசினர்.

