/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் விற்ற விவசாயிகளுக்கு ரூ.202 கோடி வழங்கல்
/
நெல் விற்ற விவசாயிகளுக்கு ரூ.202 கோடி வழங்கல்
ADDED : நவ 22, 2025 01:30 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த 10,196 விவசாயிகளுக்கு, 202.83 கோடி ரூபாயை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கியது.
விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,545 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 10,196 விவசாயிகள் நெல் விற்பனை செய்துள்ளனர்.
இதில், 80,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு, 202.83 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
மதுராந்தகம் அருகே சிலாவட்டம், அண்டவாக்கம், கீரப்பாக்கம் ஆகிய பகுதிகளில், கொள்முதல் நிலையங்களில் நெல் பாதுகாப்பாக உள்ளது. இந்த நெல், அரசு மற்றும் தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.

