/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டை உடைத்து சுவாமி சிலை, பணம் திருட்டு
/
பூட்டை உடைத்து சுவாமி சிலை, பணம் திருட்டு
ADDED : நவ 04, 2024 03:29 AM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, ஸ்ரீவாரி நகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்வேஸ் விஷால், 19. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு சென்று, நேற்று மாலை 6:00 மணிக்கு, தாய் வரலட்சுமியுடன் திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 600 கிராம் வெள்ளியிலான ராகவேந்திரர், சரஸ்வதி சிலைகள், 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
இது குறித்து, அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.