/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டேபிள் டென்னிஸ் திருவள்ளூர் சிறுவர்கள் அபாரம்
/
டேபிள் டென்னிஸ் திருவள்ளூர் சிறுவர்கள் அபாரம்
ADDED : பிப் 18, 2025 11:54 PM

சென்னை,
ஏ.சி.இ., டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, கொரட்டூரில் உள்ள அகாடமியில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தன.
போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 11, 13, 15, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கு, தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்படி, 11 வயது சிறுவர்கள் பிரிவில் சுஜேத், சிறுமியரில் சஹானா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர். அதேபோல், 13 வயது பிரிவில், சுஜேத் மற்றும் பிரதி-க்‑ஷா; 15 வயது பிரிவில், அருணாச்சலம் மற்றும் பிரதிக்‑ஷா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.
இதேபோல், 17 வயது பிரிவில், சஞ்சய் மற்றும் தனிஷ்கா; 19 வயதில் அருணாச்சலம் மற்றும் லத்திகா ரமேஷ்; ஆண்களில் சுபாஷ் மற்றும் பெண்களில் ஐஸ்வர்யா வினோத் ஆகியோர் வெற்றி பெற்று, முதலிடத்தை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலரும், மாநில சங்கத்தின் இணை செயலருமான ஜோசப் ஆகியோர், பரிசுகள் வழங்கினர்.

