ADDED : ஜூன் 22, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு வட்டாட்சியர்களை மாற்றி, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதன்படி செய்யூரில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர் சரவணன், திருப்போரூருக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, மதுராந்தகத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர் கணேசன், செய்யூர் வட்டாட்சியராக பொறுப்பேற்றார். அவருக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.