sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தையூர் மாநகர பேருந்து பணிமனை திட்டம்...கிடப்பில்!:10 ஆண்டுகளாக நிறைவேறாததால் அதிருப்தி

/

தையூர் மாநகர பேருந்து பணிமனை திட்டம்...கிடப்பில்!:10 ஆண்டுகளாக நிறைவேறாததால் அதிருப்தி

தையூர் மாநகர பேருந்து பணிமனை திட்டம்...கிடப்பில்!:10 ஆண்டுகளாக நிறைவேறாததால் அதிருப்தி

தையூர் மாநகர பேருந்து பணிமனை திட்டம்...கிடப்பில்!:10 ஆண்டுகளாக நிறைவேறாததால் அதிருப்தி


ADDED : டிச 19, 2024 08:56 PM

Google News

ADDED : டிச 19, 2024 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:தையூர் மாநகர பணிமனை திட்டம் அறிவித்து 10 ஆண்டுகள் ஆகியும், இன்னும் பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்

சென்னையில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் கோவளத்திற்கு, நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள் இரவு நேரத்தில் திருவான்மியூர், தாம்பரம், அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பணிமனைகளில் நிறுத்தப்படுகின்றன.

இப்பேருந்துகள் பழுதடைந்தால், பழுது நீக்கம் செய்ய, மேற்கண்ட பணிமனைகளிலிருந்து பராமரிப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வருகின்றனர்.

இவர்கள் வந்து பேருந்தை சீரமைக்க, நீண்ட நேரம் ஆகிறது. இதனால் நேர விரயம், எரிபொருள் வீணாகுதல், கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், பேருந்தில் வரும் பயணியரும் பாதிக்கப்படுகின்றனர்.

அதேபோல், மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிகளில் இரவு பணியில் உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சென்னைக்கு சென்று, தாங்கள் பணியாற்றும் பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு, அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தையூர் பகுதியில் பேருந்து பணிமனை அமைக்கப்பட்டால், இந்த தடத்தில் பணியாற்றுவோர் பேருந்துகளை இங்கு நிறுத்திவிட்டு, விரைவில் வீடு திரும்பவும், மீண்டும் பணிக்கு வரவும் எளிதாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு, கடந்த 2014ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபை கூட்டத்தொடரில், விதி எண் 110ன் கீழ், ஓ.எம்.ஆர்., சாலை, திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில், மாநகர போக்குவரத்து பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக, ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, 11 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டத்திற்கான தகவல் பலகையும் வைக்கப்பட்டது. இதை போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பகுதிவாசிகள், பயணியர் உள்ளிட்ட அனைவரும் வரவேற்று மகிழ்ந்தனர்.

ஆனால், பணிமனை அமைவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது இத்திட்டம் கிடப்பில் உள்ளதால் ஊழியர்கள், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

தையூரில் பேருந்து பணிமனை அமைந்தால், சென்னை, புறநகர் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும், கூடுதல் பேருந்து சேவை கிடைக்கும். குறிப்பாக அதிகாலை நேரத்தில், பணிக்கு செல்வோருக்கு கூடுதல் பேருந்து வசதி இருக்கும்.

திருப்போரூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, இரவு நேரத்தில் தையூர் பணிமனையில் நிறுத்த ஏதுவாக இருக்கும்.

அதேபோல், பேருந்துகள் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றால், இங்கிருந்து ஊழியர்கள் சென்று, உடனே சரிசெய்யவும் முடியும்.

எனவே, கிடப்பில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற, தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

* அலைச்சல்


ஓ.எம்.ஆர்., சாலையிலேயே, திருப்போரூரில் மட்டும் தான், 40 பேருந்துகளை நிறுத்தக்கூடிய அளவிற்கு பெரிய பேருந்து நிலையம் உள்ளது.

மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிக்கு, இரவு 'ஷிப்டில்' பணிபுரிவோர், சென்னைக்கு சென்று பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு, வீட்டிற்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அலைச்சல் ஏற்படுகிறது.

தையூர் பகுதியில் பணிமனை அமைக்கப்பட்டால், இந்த தடத்தில் பணியாற்றுவோருக்கு சிரமம் குறையும்.

மேலும், தையூர் ஓ.எம்.ஆர்., சாலையில் பணிமனை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து ஊழியர்களும் தங்களின் கூட்டுறவு சங்கம் வாயிலாக, பணிமனை அமையும் நிலத்தை ஒட்டி வீட்டு மனைப்பிரிவு உருவாக்கியதை பதிவு செய்தும் வைத்துள்ளனர்.

பணிமனை தொடங்கினால், பலரும் இந்த மனைப்பிரிவில் வீடு கட்டி குடியேறுவர்.

இதனால், இப்பகுதி வளர்ச்சி அடைவதுடன், அதைச்சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சி பெறும். சிறு தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

- போக்குவரத்துக் கழக ஊழியர்கள்






      Dinamalar
      Follow us