/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தமிழக கைவினைஞர்கள் தேசிய விருதுக்கு தேர்வு
/
தமிழக கைவினைஞர்கள் தேசிய விருதுக்கு தேர்வு
ADDED : டிச 04, 2025 02:41 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் பாஸ்கரன் உள்ளிட்டோர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு ஆண்டுதோறும், நாட்டின் சிறந்த கைவினைத் தொழில் கலைஞர்கள் ஆறு பேருக்கு, 'ஷில்ப் குரு' விருது மற்றும் 18 பேருக்கு தேசிய விருதுகள் ஆகியவை வழங்கி கவுரவிக்கிறது.
தற்போது, 2023, 2024 ஆகிய ஆண்டுகளுக்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
2024 தேசிய விருதுக்கு, மாமல்லபுரத்தைச் சேர்ந்த கற்சிற்ப கலைஞர், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி முன்னாள் விரிவுரையாளரான பாஸ்கரன், புதுச்சேரியைச் சேர்ந்த காகித கைவினைஞர் மோகன்தாஸ், 2023 தேசிய விருதுக்கு, சென்னையைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் கமலக்கண்ணன் மற்றும் பிற மாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடில்லியில் வரும் 9ம் தேதி நடைபெறும் விழாவில், ஜனாதிபதியிடம் இவர்கள் விருது பெறுகின்றனர்.

