sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடை எண், முகவரியில்லாத டாஸ்மாக் கடைகள்...சந்தேகம்: ஒரே எண்ணில் கூடுதலாக இயங்குவதாக குற்றச்சாட்டு

/

கடை எண், முகவரியில்லாத டாஸ்மாக் கடைகள்...சந்தேகம்: ஒரே எண்ணில் கூடுதலாக இயங்குவதாக குற்றச்சாட்டு

கடை எண், முகவரியில்லாத டாஸ்மாக் கடைகள்...சந்தேகம்: ஒரே எண்ணில் கூடுதலாக இயங்குவதாக குற்றச்சாட்டு

கடை எண், முகவரியில்லாத டாஸ்மாக் கடைகள்...சந்தேகம்: ஒரே எண்ணில் கூடுதலாக இயங்குவதாக குற்றச்சாட்டு


ADDED : மார் 23, 2025 08:15 PM

Google News

ADDED : மார் 23, 2025 08:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், ஜி.எஸ்.டி., சாலைக்கு மிக அருகில் கடை எண், முகவரி ஏதுமின்றி டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதை கவனிக்கும் போது, ஒரே கடை எண்ணில் கூடுதலாக சில கடைகள் இயங்குகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்களின் கிண்டல், கேலிகளால் அவ்வழியாக செல்லும் பெண்கள், மாணவியர் அச்சத்தில் கடந்து செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு நகராட்சிகள் உள்ளன. இதில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகளில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்கு, ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து பிரிந்து, நெல்லிக்குப்பம் செல்லும் சாலை வளைவில், தமிழக அரசின் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

ஆனால் இந்த கடைக்கு உரிய முகவரி, கடை எண் என, எந்த விபரமும் இல்லை. இதை கவனிக்கும் போது, ஒரே கடை எண்ணில் கூடுதலாக சில டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்குகின்றனவா என, பல்வேறு தரப்பிலிருந்து சந்தேகம் எழுந்துள்ளது.

தவிர, இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே அரசு துவக்கப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என, மூன்று பள்ளிகள் உள்ளன.

இதுமட்டுமின்றி, பேருந்து நிறுத்தமும் அருகே உள்ளது. இதனால், பள்ளி விட்டுச் செல்லும் மாணவியர் மற்றும் சாலையில் செல்லும் பெண்களை, மது பிரியர்கள் கேலி, கிண்டல் செய்வது, தினமும் அரங்கேறி வருகிறது.

எனவே, ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது மூட வேண்டுமென, பள்ளி மாணவியர், பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீ., துாரத்திற்குள் மதுக்கடைகள் இயங்கக் கூடாது என, நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால், கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி., சாலையில், 10 மீ., துாரத்தில், தமிழக அரசின் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

தவிர, மூன்று அரசுப் பள்ளிகள் அருகே உள்ளன. இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்திய பின், போதையில் தள்ளாடி வரும் மதுபிரியர்களின் செய்கைகளால் பள்ளி மாணவியர், பெண்கள் கடும் அச்சத்துடன் இந்த வழித்தடத்தை கடந்து செல்கின்றனர்.

தவிர, நெல்லிக்குப்பம் செல்லும் சாலையின் வளைவில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்திற்கும் கடும் இடையூறு ஏற்படுகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தமிழகத்தில், 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்ததாகவும், அவற்றில் 500 கடைகள், கடந்த 2023ல் மூடப்பட்டு, தற்போது 4,829 கடைகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது செயல்படும் டாஸ்மாக் கடைகளில் 90 சதவீத கடைகளுக்கு, உரிய கடை எண்கள் இல்லை. தவிர, எந்த முகவரியில் அந்த கடை இயங்குகிறது என்ற விபரமும் இல்லை.

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 25 மாநகராட்சிகள் உள்ளன.

இவற்றில், மாநகராட்சிகளில் மட்டும் தலா 100 கடைகள் இயங்குவதாக கணக்கிட்டால், 2,500 டாஸ்மாக் கடைகள் கணக்கில் வருகின்றன.

தவிர, 138 நகராட்சிகளில் தலா 5 கடைகள் என்றால், 690 கடைகள், பேரூராட்சிகளில் தலா ஒரு கடை எனில், 490 கடைகள், ஐந்து ஊராட்சிகளுக்கு ஒரு கடை எனில், 2,504 கடைகள் என, மொத்தம் 6,184 கடைகள் கணக்கில் வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்குவதாக கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளுக்கு உரிய முகவரி, கடை எண் என, எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதை கவனிக்கும் போது, ஒரே கடை எண்ணில், கூடுதலாக சில டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும், டாஸ்மாக் இணையதள முகவரியில், தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான எண், கடை அமைந்துள்ள இடத்தின் முகவரி உள்ளிட்ட எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இது, சந்தேகத்தை மேலும் கூடுதலாக்குகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான கடை எண், முகவரி உள்ளிட்ட விபரங்களை, தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'அது போன மாசம்'


கடந்த பிப்., 18ம் தேதி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, சங்கர வித்யாலயா பள்ளி எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் கடை எண், முகவரி உள்ளிட்ட எந்த விபரங்களும் இல்லாமல், புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.சட்டத்திற்கு புறம்பாக, அரசே மது விற்பனை செய்வதாக, பகுதிவாசிகள் குற்றம்சாட்டினர். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்படி, அந்த டாஸ்மாக் கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us