/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருத்தேரியில் டாரஸ் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து
/
திருத்தேரியில் டாரஸ் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து
திருத்தேரியில் டாரஸ் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து
திருத்தேரியில் டாரஸ் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து
ADDED : ஏப் 29, 2025 11:57 PM

மறைமலைநகர், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று முன்தினம் இரவு, எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்றது.
சிங்கபெருமாள் அருகில் திருத்தேரி அருகில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார், படுகாயமடைந்த லாரி டிரைவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.