ADDED : மார் 14, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 38. கூலித் தொழிலாளி.
நேற்று காலை 10:00 மணிக்கு, திருக்கழுக்குன்றம் மங்கலம், சதுரங்கப்பட்டினம் சாலையில், மூத்த சகோதரர் சேகருடன் நடந்து சென்றார்.
அப்போது, செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து, விஜயகுமார் மீது மோதியது.
அதில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் சேகர் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

