/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாய் மீது 'ஸ்கூட்டர்' மோதல் வாலிபர் பலி; இருவர் காயம்
/
நாய் மீது 'ஸ்கூட்டர்' மோதல் வாலிபர் பலி; இருவர் காயம்
நாய் மீது 'ஸ்கூட்டர்' மோதல் வாலிபர் பலி; இருவர் காயம்
நாய் மீது 'ஸ்கூட்டர்' மோதல் வாலிபர் பலி; இருவர் காயம்
ADDED : டிச 25, 2024 02:03 AM
மாமல்லபுரம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கிளாப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் மகன் சுமன், 19. நேற்று முன்தினம் இவர், நண்பர்கள் சூர்யா, 19, யோகேஷ்வரன், 18, ஆகியோருடன், மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இரவு, ஹோண்டா டியோ ஸ்கூட்டரில், கிளாப்பாக்கம் திரும்பினர். இரவு 11:00 மணியளவில், மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியை கடந்தபோது, அங்கிருந்த நாய் மீது ஸ்கூட்டர் மோதி, சாலையோர கல்லிலும் மரத்திலும் மோதி கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த மூவரையும், மாமல்லபுரம் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், சுமன் சிகிச்சை பலனின்றி, சற்று நேரத்தில் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சுமனின் தந்தை சரவணன் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.