/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் மொபைல்போன் திருட்டு பிடிக்க முயன்ற வாலிபர் படுகாயம்
/
ரயிலில் மொபைல்போன் திருட்டு பிடிக்க முயன்ற வாலிபர் படுகாயம்
ரயிலில் மொபைல்போன் திருட்டு பிடிக்க முயன்ற வாலிபர் படுகாயம்
ரயிலில் மொபைல்போன் திருட்டு பிடிக்க முயன்ற வாலிபர் படுகாயம்
ADDED : மே 27, 2025 08:11 PM
மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாநகராட்சி, அப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் தீவேஷ், 25.
மறைமலை நகரில் தங்கி, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம், தன் தாயின் பிறந்தநாளுக்கு காஞ்சிபுரம் சென்று, மீண்டும் புறநகர் மின்சார ரயிலில் படியில் அமர்ந்து, மறைமலை நகர் நோக்கி சென்றார்.
செங்கல்பட்டு அடுத்த பரனுார் ரயில் நிலையம் அருகே சென்ற போது, தண்டவாளம் அருகில் இருந்த மர்ம நபர்கள், தீவேஷ் கையில் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில், தீவேஷ் தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்து, படுகாயமடைந்தார்.
தண்டவாளம் அருகில் அடிபட்டு கிடந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசார் அவரை, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.