/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சரக்கு வாகனம் மோதி வாலிபர்கள் படுகாயம்
/
சரக்கு வாகனம் மோதி வாலிபர்கள் படுகாயம்
ADDED : மார் 31, 2025 02:04 AM
மறைமலைநகர்:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதியழகன், 23. இவரது நண்பர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிஷோர், 20.
இருவரும், சிங்கபெருமாள்கோவிலில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு இருவரும், 'யமாஹா ஆர்.15' பைக்கில் சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்றனர். மதியழகன் பைக்கை ஓட்டினார்.
மெல்ரோசாபுரம் சந்திப்பில் செங்கல்பட்டு மார்க்கமாக திரும்பிய போது, கடலுாரில் இருந்து சென்னை நோக்கி வந்த 'எய்ச்சர்' சரக்கு வாகனம், இவர்களது பைக்கில் மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு, பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன், 41, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.