/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் -- மானாமதி சாலையில் வெள்ளை கோடு அமைக்க டெண்டர்
/
திருப்போரூர் -- மானாமதி சாலையில் வெள்ளை கோடு அமைக்க டெண்டர்
திருப்போரூர் -- மானாமதி சாலையில் வெள்ளை கோடு அமைக்க டெண்டர்
திருப்போரூர் -- மானாமதி சாலையில் வெள்ளை கோடு அமைக்க டெண்டர்
ADDED : பிப் 18, 2025 08:37 PM
திருப்போரூர்:திருப்போரூர் -- மானாமதி இடையேயான சாலையில் சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த சாலையில் நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சேதமடைந்திருந்த இச்சாலையின் சீரமைப்பு பணிகள், வனத்துறை அனுமதி கிடைக்காததால் கிடப்பில் இருந்தன.
சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள், அனைத்து துறைகளுக்கும் கோரிக்கை வைத்து, பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 28 கோடி ரூபாய் மதிப்பில், திருப்போரூர் முதல் மானாமதி வரை 10 கி.மீ., துாரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டது.
ஆனால், சாலையின் நடுவே வெள்ளைக்கோடு அமைக்காததால், வாகனங்கள் தாறுமாறாக சென்று, விபத்து ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், வாகன விபத்துகளை தவிர்க்க, சாலையின் நடுவே வெள்ளைக்கோடு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, சாலை நடுவே வெள்ளைக்கோடு அமைக்க,'டெண்டர்' விடப்பட்டு உள்ளது.

