/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செக்யூரிட்டி கொலை வழக்கு தென்காசி நபர் சிக்கினார்
/
செக்யூரிட்டி கொலை வழக்கு தென்காசி நபர் சிக்கினார்
ADDED : அக் 06, 2024 01:09 AM

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் புதிய பர்னிச்சர் கடை திறப்பதற்கான பணி நடக்கிறது.
இங்கு, ஒப்பந்த நிறுவன காவலாளி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர், 41, என்பவர், கடந்த 26ம் தேதி புதிதாக பணியில் சேர்ந்தார்.
கடைக்கு லோடு இறக்கும் தொழிலாளி அசோகன் என்பவர், 10 நாட்களாக கடை வளாகத்தில் தங்கியுள்ளார்.
கடந்த 27ம் தேதி காலை 11:00 மணி வரை கடை திறக்கப்படவில்லை. அங்கு வந்த கட்டட உரிமையாளர் தேடியபோது, காவலாளி ராமர், இரண்டாவது தளத்தில், தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். உடன் இருந்த அசோக் மாயமானது தெரிந்தது.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோகனை தேடிவந்தனர்.
அசோகன் தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் அடுத்த காளத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது.
அங்கு தலைமறைவாக இருந்த அசோகனை போலீசார் நேற்று முன்தினம் மாலை பிடித்து, திருப்போரூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், ராமர் தன்னிடம் 500 ரூபாயை பறித்து மது வாங்கியுள்ளார். மேலும், வேலை தொடர்பாக மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்து, அங்கிருந்த கட்டையால் போதையில் இருந்த ராமரை அடித்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அசோகனை போலீசார் கைது செய்தனர்.