/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட புத்தகம் விநியோகம்
/
செங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட புத்தகம் விநியோகம்
செங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட புத்தகம் விநியோகம்
செங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட புத்தகம் விநியோகம்
ADDED : ஜூன் 02, 2025 11:50 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட உபகரணங்ககள், நேற்று வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 498 அரசு தொடக்கப் பள்ளிகள், 198 நடுநிலை பள்ளிகள், 65 அரசு உயர் நிலை பள்ளிகள், 80 அரசு மேல்நிலை பள்ளிகள், 83 அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள், 27 நடுநிலை பள்ளிகள், 19 அரசு உதவிபெறும் உயர் நிலை பள்ளிகள், 22 அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 42,937 மாணவர்களும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 37,627 மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 30,770 மாணவர்களும் உள்ளனர்.
பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 19,906 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பாட புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவற்றை அரசு வழங்கியது. கோடை விடுமுறை நாட்களில், லாரிகள் வாயிலாக, இவை பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம், மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், புத்தகப்பை, எழுது பொருட்கள் வழங்கும் விழா, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.
இதேபோன்று, மாவட்டம் முழுதும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாடபுத்தகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், விடுமுறை முடிந்து மற்றும் புதிதாக வந்த மாணவர்களை, மாலை அணிவித்து சாக்லெட், செடிகள் வழங்கி கவுரவித்து, ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கோடை விடுமுறைக்கு பின், நேற்று பள்ளிகள் திறந்த நிலையில், கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 2,900 மாணவ, மாணவியருக்கு, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, நோட்டு புத்தகங்களை வழங்கினார்.