/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோயம்பேடு போலீசாரிடம் சிக்கிய 'ஜவுளி' திருடன்
/
கோயம்பேடு போலீசாரிடம் சிக்கிய 'ஜவுளி' திருடன்
ADDED : ஜன 18, 2024 01:48 AM

சென்னை:கோயம்பேடு -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை கோயம்பேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் ஹாயாக அமர்ந்து, அங்குள்ள துணிக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தார்.
போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் தி.நகர், தாமஸ் சாலையைச் சேர்ந்த வசந்தகுமார், 24, என, தெரியவந்தது.மேலும், இருசக்கர வாகனத்தில் சென்று கடையை நோட்டமிட்டு, இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரும்பு கம்பி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது வில்லிவாக்கம், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், மாம்பலம், பீர்க்கன்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 14 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.