/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டுநரில்லாத 2ம் மெட்ரோ ரயில் ஓரிரு நாளில் சென்னை வருகிறது
/
ஓட்டுநரில்லாத 2ம் மெட்ரோ ரயில் ஓரிரு நாளில் சென்னை வருகிறது
ஓட்டுநரில்லாத 2ம் மெட்ரோ ரயில் ஓரிரு நாளில் சென்னை வருகிறது
ஓட்டுநரில்லாத 2ம் மெட்ரோ ரயில் ஓரிரு நாளில் சென்னை வருகிறது
ADDED : பிப் 15, 2025 12:40 AM
சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் மொத்தம் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து, சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், பூந்தமல்லி பணிமனை மற்றும் கோயம்பேடில் உள்ள பணிமனையில் குறுகிய துாரம் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக, வேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
ஓட்டுநர் இல்லாத இரண்டாவது மெட்ரோ ரயில் இன்று அல்லது நாளைக்கு, ஸ்ரீசிட்டியில் இருந்து சென்னைக்கு வர உள்ளது.
இந்த ரயிலை, கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி தடத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான மேம்பால பாதையில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின் ரயில் சேவை மாற்றம்
கடற்கரை - எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 11:45 மணி முதல் மறுநாள் அதிகாலை 4:30 மணி வரையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது.
கடற்கரை - தாம்பரம் காலை 6:15 மணி ரயில் நாளை ரத்தாகிறது
கூடுவாஞ்சேரி - கடற்கரை இரவு 10:40, 11:15 மணி ரயில்கள் இன்று தாம்பரம் வரை இயக்கப்படும்
செங்கல்பட்டு - கடற்கரை இரவு 10:10, 11:00 மணி ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படும் என, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.