/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளியாற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
/
கிளியாற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
கிளியாற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
கிளியாற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
ADDED : நவ 29, 2024 08:43 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட கத்திரிச்சேரி பகுதியைச் சேர்ந்த பூபாலன் மகன் பிரபாகரன், 8. முன்னுாத்திக்குப்பத்தில் உள்ள பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால், பிரபாகரன் மற்றும் அவரது உறவினர் மகன் விமல், 8, ஆகிய இருவரும், கத்திரிச்சேரி பகுதியில், மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் கிளியாற்று பகுதிக்கு, இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளனர்.
அப்போது, ஆற்றில் இறங்கிய போது, பிரபாகரன் தவறி விழுந்துள்ளார். இதில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். விமல் கூச்சலிட்டதை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து, ஆற்றில் இறங்கி சிறுவனை தேடினர்.
பின், மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அளித்த தகவலின்படி, மதுராந்தகம் தீயணைப்பு துறையினர், ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவனின் உடலை மீட்டனர்.
பின், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.