/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதியில் நின்ற கால்வாய் பணி கழிவுநீர் தேங்குவதால் அவதி
/
பாதியில் நின்ற கால்வாய் பணி கழிவுநீர் தேங்குவதால் அவதி
பாதியில் நின்ற கால்வாய் பணி கழிவுநீர் தேங்குவதால் அவதி
பாதியில் நின்ற கால்வாய் பணி கழிவுநீர் தேங்குவதால் அவதி
ADDED : ஏப் 22, 2025 12:00 AM

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன், மூன்றடி அடி ஆழம் பள்ளம் தோண்டி, புதிய கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
மற்ற கால்வாயுடன் இதை இணைத்து பணிகளை முடிக்காததால், நாளுக்கு நாள் இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி, தற்போது வெளியேற வழியின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வழிந்தோடி, சாலை மற்றும் குடியிருப்புகளில் தேங்கி வருகிறது.
இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி, கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது.
இந்த கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை மனுக்களும் அளித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால், விரைவில் திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.