/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமண்டூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசை
/
மாமண்டூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசை
மாமண்டூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசை
மாமண்டூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசை
ADDED : ஜூன் 09, 2025 02:53 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டம், மாமண்டூர் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது.
பகுதி மக்கள் தவிர, சுற்றுப்பகுதி மக்களிடையேயும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த 6ம் தேதி காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர் பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சிகள் துவக்கப்பட்டன.
தொடர்ந்து, நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, யாத்ரா தானம் முடித்து, 9:45 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடந்தது.
இதையடுத்து, காலை 10:00 மணிக்கு, விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, காலை 10:15 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசித்தனர்.