/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலில் மாயமானவர்கள் சடலங்கள் கரை ஒதுங்கின
/
கடலில் மாயமானவர்கள் சடலங்கள் கரை ஒதுங்கின
ADDED : நவ 18, 2024 03:40 AM

மாமல்லபுரம்:சென்னை, மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்கேசவ், 20. முகப்பேர் தனியார் கல்லுாரி, பி.காம்., இறுதியாண்டு மாணவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சையது ரியாஸ், 18. தனியார் கேட்டரிங் நிறுவன சமையல் கலைஞர்.
நேற்று முன்தினம், இவர்கள் இருவரும், மேலும் இரண்டு நண்பர்கள், தோழி ஆகியோருடன், மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.
மீனவர் பகுதி அருகில் கடலில் குளித்தபோது, கிருஷ்கேசவ், சையது ரியாஸ் ஆகியோர், அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். மாமல்லபுரம் போலீசார், இரண்டு நாளாக தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு, மாமல்லபுரம் வெண்புருஷம், கல்பாக்கம் அடுத்த உய்யாலிகுப்பம் ஆகிய மீனவ பகுதி கடற்கரையில், அவர்களின் சடலங்கள் தனித்தனியே கரை ஒதுங்கின.
இரண்டு பேரின் முகத்திலும், சதையை மீன்கள் தின்று, முற்றிலும் சிதைந்திருந்தன. போலீசார், அவர்களின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பெற்றோரிடம் காண்பித்து, எந்த சடலம் யாருக்குரியது என, அடையாளம் காணப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.