/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சின்னாபின்னமான சிமென்ட் சாலை இரும்புலியில் அடிக்கடி விபத்து
/
சின்னாபின்னமான சிமென்ட் சாலை இரும்புலியில் அடிக்கடி விபத்து
சின்னாபின்னமான சிமென்ட் சாலை இரும்புலியில் அடிக்கடி விபத்து
சின்னாபின்னமான சிமென்ட் சாலை இரும்புலியில் அடிக்கடி விபத்து
ADDED : டிச 17, 2024 11:38 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே உள்ள இரும்புலி ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட இரும்புலி, புதிய காலனி பகுதியில், மாரியம்மன் கோவில் தெரு உள்ளது.
இப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தும் இந்த தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை பராமரிப்பின்றி, நாளடைவில் ஜல்லிகள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், சாலையில் செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர், ஜல்லியில் சறுக்கி விழுகின்றனர். இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
சாலையை சீரமைக்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராமவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.