/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பையில் மின்சாரம் தயாரிக்க முடிவு ரூ.1.74 கோடியில் திட்ட பணி துவக்கம்

ADDED : நவ 22, 2024 12:29 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில், பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள், 400க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு, தினமும், 33 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை, நகராட்சி பகுதியில் உள்ள நான்கு நுண்ணுர மையங்கள், மூன்று வளம் மீட்பு மையங்களில் தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதிகளில் உருவாகும் மட்கும் குப்பை மற்றும் உணவு கழிவுகளை மறு சுழற்சி செய்து, அதன் வாயிலாக இயற்கை வாயு மற்றும் மின்சாரம் முடிவு செய்யப்பட்டது.
அதற்காக, 15வது நிதிக்குழு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2022 -- 23ன் கீழ், 1 கோடியே 74 லட்ச ரூபாய் திட்ட மதிப்பில், மறைமலை நகர் அடிகளார் சாலையில், உயிரி வழி மீத்தேன் ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடந்தது.
இதில், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் ரமேஷ், சுகாதார அலுவலர் செல்வராஜ் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.