/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் கிடக்கும் மின் கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
/
சாலையில் கிடக்கும் மின் கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
சாலையில் கிடக்கும் மின் கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
சாலையில் கிடக்கும் மின் கம்பம் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
ADDED : மார் 18, 2024 03:21 AM

செய்யூர், : செய்யூர் அருகே சீக்கனாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வேளூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தில் இருந்து வயல்வெளிக்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. விவசாயிகள் தங்களது வயல்வெளிக்கு சென்று வர, தார்ச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் பயன்பாடு இல்லாத மின் கம்பம், சாலையில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் சாய்ந்த மின் கம்பம், தற்போது வரை அகற்றப்படாமல், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் சாய்ந்துள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.