/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் களைகட்டியது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
/
செங்கையில் களைகட்டியது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
செங்கையில் களைகட்டியது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
செங்கையில் களைகட்டியது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 02, 2026 05:13 AM

- நமது நிருபர் குழு -: செங்கை மாமல்லபுரத்தில் பயணியர் குவிந்து, புத்தாண்டு தின சுற்றுலா களைகட்டியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்து கொண்டாடினர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல், புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
மாமல்லபுரம் சிற்பங்கள், கடற்கரை கோவில், விடுதிகள், பண்ணை வீடுகள் ஆகியவற்றில் குடும்பத்தினர், குழுவினர், காதலர்கள் என முகாமிட்டு, நடனமாடி குதுாகலித்தனர்.
மழை பெய்ய துவங்கிய நிலையிலும், 'கேக்' வெட்டி உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று, பிறரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
நேற்று காலை முதல், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணியர் குவிந்து பறவைகளை ரசித்தனர்.
இதே போல, கோவில்களிலும் அதிக அளவில் மக்கள் குவிந்து சுவாமியை வழிபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், புகழ்பெற்ற செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோதண்டராமர், ஆத்துார் முக்தீஸ்வரர் கோவில், சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், மலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்.
மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில், அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில்களில் பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு, சேம்புலிபுரத்தில், ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில், புத்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு தரிசனம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையடுத்து நேற்று காய்கறிகள், பழங்கள், துளசி மற்றும் வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆறுமுக பக்த ஆஞ்சநேயருக்கு, தீபாராதனை செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

