/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை, திருவிடந்தை கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
/
மாமல்லை, திருவிடந்தை கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
மாமல்லை, திருவிடந்தை கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
மாமல்லை, திருவிடந்தை கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
ADDED : ஜன 08, 2025 07:45 PM
மாமல்லபுரம்:பெருமாள் கோவில்களில் நாளை, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் ஆகிய கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகின்றன.
கோவில்களில் அருள்பாலிக்கும் மூலவர் சுவாமி சிலைகள், சுதை சிலையாக உள்ளனர். எனவே, சிலையை பராமரித்து பாதுகாக்க, ஆண்டுதோறும் சிலைக்கு தைல காப்பு சாற்றப்படும்.
கார்த்திகை தீபம் கொண்டாடிய, கடந்த டிச., 14ம் தேதி, சிலைகளுக்கு சாம்பிராணி, சந்தனாதி தைலம் உள்ளிட்ட மூலிகை தைல காப்பு சாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கடந்த 1ம் தேதி ஸ்தலசயன பெருமாள், மலைமண்டல பெருமாள் ஆகியோர் தைல காப்பு அகற்றப்பட்டது. வைகுண்ட ஏகாதசியான நாளை மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் கோவில்களில், காலை 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து, 5:30 மணிக்கு, அலங்கார உற்சவ சுவாமி சொர்க்கவாசல் கடக்கிறார்.
திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நாளை, மூலவர் தைல காப்பு அகற்றப்பட்டு, காலை 6:00 மணிக்கு, ரங்கநாதர் சொர்க்கவாசல் கடக்கிறார்.