ADDED : ஜன 26, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த இந்தளூர் கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் மகள் கங்காதேவி, 16.
கடந்த 22-ம் தேதி, வழக்கம் போல் காலையில் பள்ளிக்குச் சென்ற கங்காதேவி, பள்ளி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால், பெற்றோர்கள், அக்கம், பக்கம் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து, பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால், நேற்று அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளிக்குச் சென்ற மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.

