/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்
/
வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்
வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்
வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்
ADDED : மே 08, 2025 02:02 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வந்த இரும்பு கம்பிகள், மண்ணில் மட்கி வீணாகி வருகின்றன.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, 59 ஊராட்சிகள் உள்ளன. அதில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வீடு கட்டுவதற்கு பணி ஆணை பெற்ற பயனாளிகள் முதற்கட்ட பணியாக, காலங்குழிகள் எடுத்து, அடித்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு வழங்குவதற்காக, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், இரும்பு கம்பிகள் கொண்டு வரப்பட்டு, அப்பகுதியில் உள்ள மரத்தடி மற்றும் காலியிடத்தில் உரிய பாதுகாப்பின்றி, மண் தரையில் வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் இரும்புக் கம்பிகள், மழை மற்றும் வெயிலில் காய்ந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன.
எனவே, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், காலியாக உள்ள கட்டடத்தில் இவற்றை பாதுகாப்பாக வைத்து, வழங்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.