/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ஸ்தலசயனர் இன்று பார்வேட்டை உலா
/
மாமல்லை ஸ்தலசயனர் இன்று பார்வேட்டை உலா
ADDED : ஜன 16, 2025 12:19 AM
மாமல்லபுரம், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், ஐந்து ஆண்டுகளுக்கு பின், இன்று குழிப்பாந்தண்டலம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு பார்வேட்டை உலா செல்கிறார்.
ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. வைணவ சமய 108 திவ்வியதேசங்களில், 63வதாக சிறப்புபெற்றது.
உற்சவர் உலகுய்யநின்ற நாயனார், ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலத்தில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு, பார்வேட்டை உலா சென்று, முயல் வேட்டையாடும் உற்சவம் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ல் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, பின் நடந்த கோவில் திருப்பணிகள் ஆகிய காரணங்களால், நான்காண்டாக உற்சவம் நடைபெறவில்லை.
கோவில் கும்பாபிஷேகம், கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் உற்சவ ஏற்பாடு செய்தது.
இன்று, அதிகாலை 2:30 மணிக்கு, மார்கழி மாத வழிபாடு நடத்தி, உற்சவர், 3:45 மணிக்கு, கோவிலிலிருந்து பார்வேட்டை உலா புறப்படுவதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

