/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமியாரை பிளேடால் கிழித்தவர் கைது
/
மாமியாரை பிளேடால் கிழித்தவர் கைது
ADDED : செப் 28, 2024 05:05 AM
மறைமலை நகர் : செங்கல்பட்டு தட்டான்மலை பகுதியை சேர்ந்தவர் நுாரி, 60. இவரது முதல் மகள் மஸ்தானி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஹேக் தாவூத், 35, என்பவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார்.
சில மாதங்களாக, நுாரியிடம் பணம் கேட்டு ஷேக் தாவூத் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி, நுாரி வீட்டில் தனியாக இருந்த போது வந்த ஷேக் தாவூத், பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
நுாரி பணம் கொடுக்க மறுக்கவே, ஷேக் தாவூத் தான் வைத்திருந்த பிளேடால், தோள்பட்டை, காது உள்ளிட்ட இடங்களில் கிழித்துள்ளார். நுாரி கூச்சலிடவே, ஷேக் தாவூத் தப்பிச் சென்றார்.
அக்கம் பக்கத்தினர் நுாரியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின், நுாரி அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷேக் தாவூதை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.