/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிர்வாக செலவு ஒப்புதல் பெறவே கூட்டம் திருக்கழுக்குன்றம் கவுன்சிலர்கள் அதிருப்தி
/
நிர்வாக செலவு ஒப்புதல் பெறவே கூட்டம் திருக்கழுக்குன்றம் கவுன்சிலர்கள் அதிருப்தி
நிர்வாக செலவு ஒப்புதல் பெறவே கூட்டம் திருக்கழுக்குன்றம் கவுன்சிலர்கள் அதிருப்தி
நிர்வாக செலவு ஒப்புதல் பெறவே கூட்டம் திருக்கழுக்குன்றம் கவுன்சிலர்கள் அதிருப்தி
ADDED : பிப் 18, 2025 09:02 PM
திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சில் கூட்டம், நிர்வாக செலவுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும், வளர்ச்சித் திட்ட தீர்மானங்கள் இல்லை என்றும், ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 54 ஊராட்சிகள், 22 ஒன்றிய குழு வார்டுகள் உள்ளன.
தி.மு.க.,வைச் சேர்ந்த அரசு, ஒன்றியக்குழு தலைவராகவும், அதே கட்சியைச் சேர்ந்த பச்சையப்பன் துணைத்தலைவராகவும் உள்ளனர்.
இக்குழுவின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் கூட்டத்தில், மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறப்படுகிறது.
அத்துடன், நிர்வாக செலவுகளுக்கான தீர்மானங்களே பிரதானமாக இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சில கவுன்சிலர்கள் கூறியதாவது:
ஒன்றிய குழுவின் மாதாந்திர கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சில தீர்மானங்களே கொண்டு வரப்படுகின்றன. நிர்வாக செலவுகளுக்கு குழு ஒப்புதல் பெறுவதாகவே, பெரும்பாலான தீர்மானங்கள் உள்ளன.
குடிநீர், சாலை, வடிகால்வாய் உள்ளிட்டவற்றை செயல்படுத்த, பல கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்தும், அதுபற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றுவது இல்லை.
ஜன., மாதம் 31ம் தேதி நடந்த கூட்டத்தில், நிர்வாக செலவு குறித்து, 16 தீர்மானங்கள் கொண்டுவந்து, ஒப்புதல் பெற்றனர்.
ஆனால், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒரு தீர்மானமும் இல்லை.
அனைத்து திட்டங்களிலும், இப்பகுதி தன்னிறைவு பெற்றுவிட்டதால், வளர்ச்சித் திட்டங்களே இல்லையா என்பது, நிர்வாகத்திற்கே வெளிச்சம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

