/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண் விரைந்து சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

ADDED : டிச 08, 2024 01:56 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் குபேரன் நகர் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு, பேருந்து நிலைய வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தப்பட்டு, பூமிக்கடியில் குழாய்கள் பதித்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடிநீர்பைப் லைன் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில்,
குபேர நகர் இரண்டாவது தெருவில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பைப் லைன் பழுதாகி, குடிநீர் அதிக அளவில் வெளியேறியது. இது தொடர்பாக, அப்பகுதி வாசிகள் நகராட்சி தலைவர் கார்த்திக் கமிஷனர் ராணி ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அவர்கள் உத்தரவின் படி நகராட்சி பணியாளர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்து , பூமிக்கடியில் சேதமான பைப் லைனை மாற்றி, சுற்றுவட்டார பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகத்திற்கான பணியை செய்தனர்.