/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறக்காத ரயில்வே 'கேட்' மாயமான 'கேட் கீப்பர்'
/
திறக்காத ரயில்வே 'கேட்' மாயமான 'கேட் கீப்பர்'
ADDED : பிப் 05, 2025 01:52 AM

வில்லியம்பாக்கம் வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலையில், 'ரயில்வே கேட்' நீண்ட நேரமாக திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் ரயில்வே தடத்தில் வில்லியம்பாக்கம் ரயில் நிலையம் அருகில், வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலையில், 'ரயில்வே கேட்' அமைந்துள்ளது.
நேற்று மாலை 6:40 மணியளவில், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி, புறநகர் மின்சார ரயில் வரும் போது, பணியில் இருந்த ரயில்வே 'கீப்பர்' கேட்டை மூடினார்.
சில நிமிடம் வில்லியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற மின்சார ரயில் புறப்பட்டுச் சென்ற 5 நிமிடங்கள் கழித்தும், கேட் திறக்கப்படவில்லை.
இதில் கோபமடைந்த சில வாகன ஓட்டிகள், கேட் கீப்பர் அறையில் சென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. இதற்கிடையே அப்போது பணிக்கு வந்த ரயில்வே ஊழியர், கேட்டை திறந்து விட்டார்.
ரயில்வே கேட் மூடும் போது பணியில் இருந்த கேட் கீப்பர், பணி மாற்றுவதற்கு வேறு நபர் வரும் முன்னரே சென்றது தெரிந்தது.
இதுபோன்ற சம்பவம், இந்த ரயில்வே கேட்டில் அடிக்கடி நடப்பதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.