/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்
/
புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்
புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்
புதிதாக கட்டடப்பட்ட நிழற்குடை போஸ்டரால் நிரம்பி வழியும் அவலம்
ADDED : மார் 08, 2024 12:26 PM

சித்தாமூர்:செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் - செய்யூர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து சாலை விரிவாக்கம் முடிந்த பின், பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்ட இடங்களில், கழிப்பறையுடன் கூடிய புதிய பயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த புதிய பயணியர் நிழற்குடைகளில், 'நோட்டீஸ் ஒட்டாதீர்' என, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சுவரில் எழுதப்பட்டு உள்ளது.
ஆனால், அதையும் மீறி சுவரில் போஸ்டர் ஒட்டி அசுத்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பயணியர் நிழற்குடைகளில் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.