/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலை ஆக்கிரமிப்பை மீட்பது குறித்து நோட்டீஸ் வழங்கிய அமைப்பினர் கைது
/
மலை ஆக்கிரமிப்பை மீட்பது குறித்து நோட்டீஸ் வழங்கிய அமைப்பினர் கைது
மலை ஆக்கிரமிப்பை மீட்பது குறித்து நோட்டீஸ் வழங்கிய அமைப்பினர் கைது
மலை ஆக்கிரமிப்பை மீட்பது குறித்து நோட்டீஸ் வழங்கிய அமைப்பினர் கைது
ADDED : அக் 21, 2024 01:28 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இயற்கை வளத்துடன் 1,800 ஆண்டுக்கு முன், சோழர் காலத்தில் வஜ்ஜிரகிரி மலை மீது மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
இக்கோவில், மாலிக்காபூர் படையடைப்பின் போது, உடைக்கப்பட்டது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த மலையின் மீது, பிள்ளையார், செந்துார் முருகன், சப்த கன்னியர் கோவில்கள் உள்ளன. இம்மலையில், அபூர்வ மூலிகை செடிகளும், ஏராளமான மரங்களும் நிறைந்துள்ளன.
இந்த மலையில் கிறித்துவ அமைப்பின் சார்பில், பல ஏக்கர் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அனுப்பியும், நேரில் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால், 2009ல் நடந்த ஆர்.டி.ஓ., விசாரணை கூட்டத்தில், சர்ச் நிர்வாகிகள் மேற்கொண்டு எவ்வித கட்டுமானமும் கட்ட மாட்டோம் என, உறுதி மொழி அளித்தனர். ஆனாலும், உறுதிமொழியை மீறி, தொடர்ந்து கட்டுமானம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வஜ்ஜிரகிரி மலை ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின், ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்யப்பட்டது. அதில், 23.6 ஏக்கர் இடம் கிறித்துவர் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால், மலை உச்சியில் அகற்றப்பட்ட ஹிந்து கோவில்களை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்; இயற்கை வளம் மிக்க மலையை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில், “மலையை மீட்போம் வாருங்கள்” என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை, நேற்று ஹிந்து முன்னணி நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், அச்சிறுபாக்கம் பகுதியில் வீடு வீடாக சென்று வழங்கினர்.
இது குறித்து தகவல் அறிந்துஇ சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார் மற்றும் மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், ஹிந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின், அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

