/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முன்பே ஒழுகும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் வரிப்பணம் ரூ.50 லட்சம் வீண்

ADDED : அக் 13, 2025 12:50 AM

பெருங்களத்துார்:பெருங்களத்துாரில், 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முன்பே, ஒழுகுவதாக, மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல அலுவலகம், பழைய பெருங்களத்துாரில், பேரூராட்சி அலுவலகம் இயங்கிய இடத்தில் உள்ளது. இவ்வலுவலகத்தின் பின்புறத்தில், பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இது போதுமான அளவில் இல்லை என்பதால், அதன் அருகே, 15வது நிதிக்குழு திட்டம் மூலம், 50 லட்சம் ரூபாய் செலவில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இந்த பணி முடிந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், சோதனை ஓட்டமாக, இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தண்ணீர் நிரப்பியதும், தொட்டியை சுற்றியும், கீழ் பகுதியிலும் கசிவு ஏற்பட்டு, ஒழுகுகிறது. 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, திறப்பதற்கு முன்பே, அதன் தரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அதேநேரத்தில், இவ்வளவு பணத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியை, மண்டல பொறியியல் பிரிவு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
அதனால், உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தண்ணீர் கசிவை சரிசெய்வதற்கான பணிகளை மேற்கொண்டு, அதன்பின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.