/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மயான பாதை படுமோசம் தொழுப்பேடு மக்கள் அவதி
/
மயான பாதை படுமோசம் தொழுப்பேடு மக்கள் அவதி
ADDED : அக் 25, 2025 10:38 PM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம், தொழுப்பேடு ஊராட்சியில் மயான பாதை படுமோசமாக உள்ளதால் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில், 4,5,6 ஆகிய வார்டுகளில் பட்டியலின மக்கள் 600 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு தனி மயானம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மயானத்திற்கு செல்லும் வழி மிக மோசமான நிலையில் உள்ளது.
இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், கற்கள் மற்றும் செம்மண் கலந்து, 15 அடி அகலத்தில், 1,000 மீ., நீளத்தில் மயானத்திற்கு பாதை அமைக்கப்பட்டது. மழை காரணமாக, நாளடைவில் பாதை சேதமானது.
தற்போது, கற்கள் நிறைந்து, கரடு முரடாக, நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் மாறிவிட்டது.
இந்த பாதையை தார் சாலையாக சீரமைத்து தரும்படி, தொடர் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, மோசமான நிலையில் உள்ள இந்த பாதையை தார் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

